2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் GNANAMOORTHY SURYA பௌதிக விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார். மற்றும் KIRUBAKARAN HARIKARAN உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவிலும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கலாக 21 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்களை கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் ஐயா அவர்கள் பாராட்டி வாழ்த்தினார் அவருடன் இணைந்து பாடசாலை சமூகமும் இம் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க இவர்களை பாராட்டி வாழ்த்தி நிற்கின்றது.








