CALL: +94 21 222 2184

J/Jaffna Central College

J/Jaffna Central College

"Central's Flag must never be lowered"

(+94) 21 222 2184
Email: jcentraloffice@gmail.com

Jaffna Central College
Jaffna, 40000, Northern Province, Sri Lanka

Open in Google Maps
  • Home
  • About
    • History
      • History of the College
      • Founders
      • Past Principals
    • College
      • Motto ,Vision & Mission
      • Crest & Flag
      • College Song
      • College Hymn
      • Layout Sketch
    • Organization Structure
      • Management Committee
      • Principal
      • Deputy Principal
      • Vice Principals
      • Sectional Heads
      • Subject Coordinators
      • Academic Staff
      • Non Academic Staff
    • Milestone
  • Sections
    • Students
      • Board of Prefects
      • Students Code of Conducts
      • Students Details
      • Students’ Uniform
    • Primary Section
    • Secondary
    • Advance Level
    • Vocational
  • Acadamic
  • Sports
  • Gallery
  • Co-Curriculum
    • Unions
    • Societies
    • Clubs
    • Other Activities
  • News & Events
  • Resources
  • JCC Community
    • JCC OBA UK
    • JCC OBA CANADA
    • JCC OBA SYDNEY
    • JCC Edu Care Trust
    • Requirements
  • Contact Us

கல்லூரியின் சமகால தேவைப்பாடுகள்

கல்லூரியின் சமகால அடைவுகள் மற்றும் திட்டமிடலுடன் கூடிய தூரநோக்கான அடைவுகள் என பாடசாலையிச் சமூகம் தன்னை பெறுமதியுடையதான இயங்குதளத்தில் நிலைநிறுத்தி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இங்கே தூரநோக்கு அடைவுகள் பாடசாலையின் தற்போதைய வளங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலையின் உட்கட்டமைப்பு வளங்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆளுமையைச்சேர்க்கும் கட்டமைப்புடன் ஒன்றிய வளங்கள், கல்வி தொடர்பான தேடல் மற்றும் வெளிப்படுத்தல் செயற்பாட்டுக்கான தொழிநுட்ப வளங்கள், மனித வளங்கள் என வளங்களின் தேவையறிந்து, அவற்றைப் பெற்று உச்ச பயன்பாட்டுடன் கல்வியினுடைய போட்டிச் சந்தைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய முன்னேற்பாடுகளுடன் பாடசாலை நிர்வாகம் இயங்குகின்றது.

கடந்த காலங்களில் பெற்ற வளங்களில் தேய்மானமடைந்த வளங்கள் ஏலவே இருக்கின்றதும் காலத்திற்கேற்ப புதுப்பிக்க வேண்டியதுமான வளங்கள் மற்றும் புதிதாக பெற்றுக் கொள்ள வேண்டிய வளங்கள் தொடர்பில் கல்லூரி தூரநோக்குடன் சிந்திக்க முயல்கின்றது. அவ்வகையில் தற்போது வளங்களை புத்துயிர் படுத்துவது தொடர்பான செய்முறையில் கல்லூரி முனைப்போடு செயற்படவேண்டிய தேவைப்பாடு அதிகரித்துள்ளது. மேற்கண்ட பாடசாலையின் அவசியத் தேவைகள் குறித்தும் வெளிப்படையானதொரு கருத்துப் பதிவை கல்லூரி முதல்வர் என்ற வகையில் நான் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

எமது கல்லூரியின் நீச்சல் தடாக புனர்நிர்மானம், மைதான அபிவிருத்தி, ஜிம் பயிற்சிக் கூடம் போன்ற பாடசாலையின் உட்கட்டுமானம் சார்ந்த வேலைத்திட்டங்களை பாடசாலையின் வேண்டுதலுக்கிணங்க கிராமிய மற்றும் பாடசாலைகள் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்டு செய்துதருவதாகக்கூறி 42.5 million பெறுமதியான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இச் செயற்திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் யாழ் மாவட்ட கடற்படையின் அதிகாரி ஒருவரின் தலைமையின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

தொடர்ந்து எம்முடைய கல்லூரியின் தேவைப்படுகின்ற வளங்கள் பற்றிய கோர்வையில் முதலில் பாடசாலையின் விளையாட்டுத்துறை மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு அணி சார்ந்து பங்கேற்கின்ற பாடசாலை மட்டங்களிற்கிடையிலான இலங்கை முழுவதுமான பயிற்சியின்போது போக்குவரத்திற்கு பயன்படுகின்ற பஸ் வண்டியானது குறித்த சில காலங்களாக அதனுடைய இயந்திரப் பகுதி கோளாறு அடைந்து தூர இடங்களுக்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்லூரியின் யாழ் மாவட்ட பழைய மாணவர் சங்கம் பஸ் வண்டி வாங்குவதற்கான நிதியினை சில காலங்களாக சேகரித்துக் கொண்டு வருகின்றனர் இவ் செயன்முறையில் ஏனைய பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகள் அதிக கவனம் செலுத்தி பஸ் வண்டியை வாங்குவதற்குரிய ஏற்பாடுகளை பூர்த்தி செய்ய முனைவோமாக.

அடுத்து, Smart Board பாவனை என்பது பாடசாலை கல்விச் சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விளங்குதிறனை அதிகரிக்கின்ற இவ் புதிய தொழிநுட்பசாதனத்துடன் கூடிய வகுப்பறைகள் ஏனைய பாடசாலை வகுப்பறைகளுடன் ஒப்பிடும்போது, மத்திய கல்லூரியின் மாணவர் தொகை, வகுப்பறைகளின் தற்போதைய நிலை, கல்வித்தரம் தொடர்பான நிலையான அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன தேவைகளுக்காக அதிகமாக உருவாக்க வேண்டிய அவசியம் பாடசாலைக்கு உள்ளது.

தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற தொழில்நுட்பம் சார்ந்த கற்கைகளினால் மாதாந்தம் அறுபதாயிரம் ரூபாய்க்கு மேலதிகமான மின் கட்டணம் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் மின் கட்டணத்திற்காக பன்னிரண்டாயிரம் ரூபா பெறுமதியான நிதியையே வழங்குகின்றது. இருப்பினும் தொடர்ந்தும் புதிய ஸ்மார்ட் வகுப்புகளின் தேவைப்பாடு காரணமாக மேலும் வருகின்ற காலங்களில் மின் கட்டணம் உயர்கின்ற ஒரு பிரச்சினையை பாடசாலை எதிர் நோக்கவிருக்கின்றது இங்கு சூரிய மின்கல பாவனை தொடர்பானதொரு எண்ணப்பாங்குடன் மின் கட்டண உயர்வை அணுகுவோமானால் பாடசாலையில் சூரிய மின்கலங்களை பொருத்தி எதிர்காலத்தில் மின்சார செலவினை குறைக்க முடியும். இவ் செயன்முறை சார்ந்து ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்னைத் தொடர்பு கொள்ள முடியும்.
அடுத்து, விளையாட்டுத்துறையில் 17,19 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் விலகிய பின்னர் சென்ட்ரல் லயிட் விளையாட்டு கழகத்துடன் அணுகி பயிற்றுவிப்பாளரை புதிதாக நியமனம் செய்வதற்கு அவருடைய மாதாந்த சம்பளத்தை லண்டன் பழைய மாணவர்கள் நான்கு பேர் இணைந்து மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா வழங்குகின்றனர்.

இதுபோன்றே 15 மற்றும 13 வயது பிரிவு கிரிக்கெட் அணியினருக்கு பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கு பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் 10,000 ரூபா வினையும் லண்டன் பழைய மாணவர் சங்கம் 15000 ரூபாவையும் இதுவரைகாலமும் கொடுத்து வந்தனர் கடந்த சில மாதங்களில் மேற்படி பயிற்றுவிப்பாளர்கள் ஊதியம் போதாமையை காரணங்காட்டி பயிற்றுவிப்பாளர் நிலையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். அதன்பின்னர் இடைநிறுத்தப்பட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பானது இப்பொழுது தொடங்கப்பட வேண்டிய அவசியத்தை எட்டியுள்ளது ஏற்கனவே வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பயிற்றுவிப்பாளருக்கான ஊதியத் தொகையை வழங்கிக்கொன்டிருந்த பழைய மாணவர்கள் மீளவும் அதனை பெற்றுக் கொடுத்து புதிய பயிற்றுவிப்பாளருடன் பயிற்சி செவ்வனே இயக்குவதற்கு ஆக்கமளிக்க முன்வரவேண்டும்.

Present requirements of college

The government of Sri Lanka constructed our school swimming pool. It declared opened by the President His Excellency Mahinda Rajapakshe. It was functioning well but unfortunately, it is not in use due to a leak of water.
The government takes ground development project and reconstruction of the swimming pool and they will start the work soon.

In the past, our U13 and U15 cricket coach have received the salary from franc OBA Rs.10, 000 and London OBA Rs.15, 000 respectively. If they willing to do the future we can allocate a coach for U13 and U15 cricket. The college has Under 13, 15, 17, 20 teams last year U17, U20 were provincial champions in 2019. We got 4th place at the national level. In addition, we are organizing Pon. Vipulananthan tournament annually. Now unfortunately we do not have a coach to train our students. I kindly expect your support in this matter.

It’s necessary to install 50 computers in our information technology room. JCC Educare trust accepted to donate 40 computers. I take this opportunity to thank them. Additionally, we need 10 computers.

In the upper school, we have the best division in each grade. The students divided according to the scholarship results. “C” division is the best division. JCC 19-batch decided to fix a smart board in each “Divisions up to GCE A/L. I Thank JCC19-batch for your sophisticated photocopy Machine to school recently.

Our 1st Jaffna scout group has more than 50 senior scouts, 100 junior scouts, 60 Junior sea scouts, and 45 cub scouts. They are performing their duties to school. Participating in competitions and jamborees in district/ Provincial/ national levels. Scouts facing difficulties without tents. We need a troop tent and five petrol tents.

Sorry, no posts matched your criteria.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • September 2025
  • July 2025
  • June 2025
  • December 2024
  • November 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • October 2022
  • September 2022
  • August 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • May 2021
  • February 2021
  • January 2021
  • December 2016
  • September 2016
  • July 2015
  • December 2014
  • July 2014

Recent News & Events

  • Best Results of A/L 2025

  • Inter House Track & Field Meet – 2026

  • வடக்கின் பெரும் போர் எனும் துடுப்பாட்டப்போட்டியில் வெற்றி பெற்ற எமது வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று 11.03.2026) காலை இடம்பெற்றது.

  • வடக்கின் பெரும்போர் எனும் மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் எமது கல்லூரி வெற்றி பெற்றுள்ளது(07.03.2026)

  • Central Night – 2026

  • GET SOCIAL

© 2021 All rights reserved. Solution by: Rajcreation.lk.

TOP