இன்றைய தினம் கல்லூரி முதல்வரின் தலைமையில் பிரான்ஸ் நாட்டினுடைய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் திரு K. முத்துக்குமார் அவர்களினால் 19 சாரணிய மாணவர்களிற்கான சீருடை இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் மற்றும் சாரணிய பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்கமானது எமது கல்லூரிக்கு ஆண்டுதோறும் விளையாட்டு உபகரணங்களையும் 15 வயது பிரிவின்கீழ் விளையாடுகிற துடுப்பாட்ட அணியின் பயிற்றுவிப்பாளருக்கான ஊதியத்தினையும் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகின்றது . அத்துடன் இவ்வருடம் இடம்பெற்ற பதினேழு வயது பிரிவு துடுப்பாட்ட அணியின் போட்டிகளின்போது ஏற்பட்ட செலவீனங்களிலும் பங்கெடுத்துக் கொண்டது. தொடர்ந்து கற்றல் சார்ந்த விடயங்களில் தரம் 6 மற்றும் தரம் 7 இல் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்குமான செயல் அட்டைகளையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரு K முத்துக்குமார் அவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் எமது கல்லூரிக்கு உதவிகளை செய்து வருகின்றார் அவ்வகையில் தரம் 11 மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை வருடம்தோறும் வழங்கி வருகின்றார். இந்த வருடம் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கி வைத்திருந்தார்.





