யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பொருளியல் ஆசிரியராக கடமையாற்றி வரும் செல்வி புண்ணியமூர்த்தி தனலட்சுமி 35 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து தன்னுடைய 60வது வயதில் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் Romaine Cooke மண்டபத்தில் இவருக்கான சேவைநலன் பாராட்டு விழா ஆசிரியர் வட்டத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிலே உயர்தர வர்த்தகத் துறையின் விஷேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது .தன்னுடைய கல்விச்சேவையிலே வறிய மாணவர்களுக்கான பொருளாதார வசதிகளையும் அவர்களுக்கான கல்விச் சேவையையும் வழங்கியதோடு மட்டுமல்லாது சமூகத்திலே பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும்.
அத்துடன் 1997ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசு பரிட்சை கடமையாக பல்வேறு வகிபாகங்களையும் இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சாதாரணதர மாணவர்களுக்கான அபிவிருத்தி கல்வி எனும் நூலினை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமையும் இவரையே சார்கிறது.

இவர் தன்னுடைய ஓய்வை முன்னிட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ மன்றங்களுக்கு தலா 60 ஆயிரம் ரூபா அன்பளிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது ஓய்வு காலம் சிறக்கவும் நலமோடு வாழவும், இவரை வாழ்த்துவதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பெருமிதம் கொள்கிறது.





