பாடசாலை மாகாணமட்ட கடினப்பந்து T/10 சுற்றுப் போட்டி 15,16,17/7/2024 தினங்களில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியர் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது.
22 அணிகள் பங்குபற்றிய போட்டியிர் எமது கல்லூரியின் 20 வயதிற்கு உட்பட்ட அணி பங்குபற்றியது.
முதலாவது போட்டியில் எமது கல்லூரியும் கிளிநொச்சி மத்திய கல்லூரியும் மோதியது.
எமது கல்லூரி 10 பந்துப் பரிமாற்றத்திற்கு 135 ஓட்டத்திற்கு 5 இலக்குகளை இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி 10 பந்துப் பரிமாற்றத்திற்கு 74 ஓட்டத்திற்கு 7 இலக்குகளை இழந்தது.
எமது கல்லூரி அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அஜய் 70 ஓட்டங்களை பெற்றுத்தந்தார்
இரண்டாவது போட்டியில் எமது கல்லூரியும் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி அணியினரும் மோதிக்கொண்டனர்.
அம்போட்டியில் சித்தி விநாயகர் இந்து கல்லூரி அணி 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய. எமது கல்லூரி அணி 5.3வது பந்து பரிமாற்றத்தில் 3 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்று 7 இலக்குகளால் வெற்றி பெற்றது
அரையிறுதி போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடன் இடம்பெற்றது.
இதில் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி 10 பரிமாற்றத்தில் 7 இலக்குகளை இழந்து 82 ஓட்டங்களை பெற்றனர்.
இதில் நியூட்டன் 35 ஓட்டங்களையும் அஜெய் 30 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி 6 இலக்குகளை இழந்து 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 10 ஓட்டங்களால் தோல்வி அடைந்தனர்.
மத்திய கல்லூரியின் வெற்றிக்காக திசோன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.
இறுதி போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியுடன் மோதிக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 3 இலக்குகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் நியூட்டன் 50 ஓட்டங்களையும் ஸ்மித் 31, அபிலாஷ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி அணியினர் 9.5 பரிமாற்றங்களில் 71 ஓட்டங்களை பெற்று சகல இலக்குகளையும் இழந்தனர்.
மத்திய கல்லூரி சார்பில் பந்து வீச்சில் மதுசன்,நியூட்டன்,சிந்து ஆகியோர் 2 இலக்குகளையும் அஜெய் 1 இலக்கையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் மத்திய கல்லூரி வடமாகாண கடின பந்து தொடரில் 1ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இச் சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாக “நிஷாந்தன் அஜெய்” தெரிவு செய்யப்பட்டார். இவர்களுக்கு கல்லூரி சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்.







