எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆரம்ப பிரிவு நூலக உதவியாளர் செல்வி கமலாதேவி அவர்களுக்கு அவரது சேவையை பாராட்டி
கெளரவிக்கும் முகமாக ஓய்வூதிய உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 9/1/25 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்ப பிரிவில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வு காலையில் மைதானத்தில் சிறப்பாக
மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாலும் அசாதாரண காலநிலையால் சிறிய நிகழ்வாக இடம்பெற்றது
இந்த நிகழ்வில் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரனையூடாக பாடசாலை சமூகம் சார்பாக ரூ 250 000 காசோலையானது அதிபரால் வழங்கி கெளரவிக்கபட்டது
கடந்த 20 வருடங்களாக
பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு 20 வருடங்களாக மாதாந்த கொடுப்பனவையும்
இந்த ஓய்வூதிய உதவித் தொகையையும் அனுசரணையாக வழங்கிய லண்டன் பழைய மாணவர் சங்கத்திற்கு இத்தருணத்தில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் .
அதிபர்








