யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தேசிய அளவிலான துடுப்பாட்ட போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட பிரிவு 3 A இற்கான இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான வெற்றி கோப்பையையும், வடமாகாணத்தில் 2021 ஆண்டிற்கான துடுப்பாட்டத்தில் சிறந்த அணிக்கான முதல் பரிசினை பெற்றுக்கொண்ட வெற்றி கோப்பையும் பாடசாலையின் அணி வீரர்களும் விளையாட்டு குழாமும் இணைந்து பாடசாலை முதல்வரிடம் வெற்றிக் கோப்பையை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பொற்கிளிகளை வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






