யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியானது Rev .James Lynch அவர்களினால் 1816 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 206 வருடங்களை கடந்துள்ளது. இதனையொட்டி Founder’s Day Thanks giving service ஆனது St. Peter’s Methodist Church, Jaffna இல் காலை 7:30 மணிக்கு நடைபெற்றது. ஆலயத்தின் பங்குதந்தை Rev. J.J. Ganaruban அவர்களினால் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருட்தந்தையும் பழைய மாணவனாகவும் உள்ள Rev. K. Jegathas அவர்களினால் பாடசாலையின் வரலாறானது 1816 தொடக்கம் இன்று வரையுள்ள காலப்பகுதியில் நடைபெற்ற அனைத்து முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. அதன் பின்னர் அனைத்து விருந்தினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவ தலைவர்களுக்கும் விசேட தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதனை அடுத்து Romain Cooke மண்டபத்தில் துடுப்பாட்டம் (Rev.Frederick .M. Webster) மற்றும் உதைபந்தாட்டம் ( Rev.E. Gabriel -Leese )என்பவற்றை ஆரம்பித்து வைத்த கல்லூரியின் முன்னாள் அதிபர்களுடைய பெயர்கள் தாங்கிய நினைவுக் கற்கள் (Memorial Plaque) கல்லூரி முதல்வர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.













