யாழ் வலயமட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் எமது கல்லூரியிலிருந்து UNDER 20, UNDER 17 ஆகிய இரு அணிகள் கலந்துகொண்டன.
UNDER 20 அணி அரைஇறுதி போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 48 புள்ளியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 52 புள்ளியும் பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் எமது அணி யாழ்ப்பாணம் பத்திரிசியர் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 57 புள்ளியும் யாழ்ப்பாணம் பத்திரிசியர் கல்லூரி 43 புள்ளியை மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
UNDER 17 அணி கால்இறுதி போட்டியில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் புள்ளியும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி 16 புள்ளியும் எமது அணி 33 புள்ளிகளை பெற்று எமது அணி வெற்றி பெற்றது.
அணி அரைஇறுதி போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 23 புள்ளியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 28 புள்ளியும் பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் எமது அணி எதிர் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியுடன் மோதியது. இப் போட்டியில் எமது அணி 48 புள்ளியும் கொக்குவில் இந்துக் கல்லூரி 55 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. எமது அணி நான்காம் இடத்தை பெற்றது.






