யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் SLIIT நிறுவனம் தேசியரீதியில் நடாத்திய Soft Skills Quiz Competition – 2024 போட்டியில் முதல் சுற்றில் வெற்றியீட்டி இறுதி சுற்றுக்கு தொழினுட்ப பிரிவைச் 2 அணிகள் தெரிவு செய்யப்பட்டன
SLIIT நிறுவனம் நாடளாவியரீதியில் நடாத்திய மேற்படி போட்டியில் தேசியரீதியில் சுமார் 190 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி போட்டியின் முதற்கட்டம் முற்று முழுதாக நிகழ்நிலை முறையில் இடம்பெற்றது. எமது கல்லூரி சார்பாக தலா நான்கு உறுப்பினர்கள் அடங்கிய நான்கு குழுக்கள் போட்டியிட்டது. போட்டியானது இரண்டு சுற்றுக்களை உள்ளடக்கியதோடு முதலாவது சுற்றில் விமர்சன சிந்தனை தொடர்பான வினாக்களும் இரண்டாவது சுற்றில் தர்க்க சிந்தனை தொடர்பான வினாக்களும் கேட்கப்பட்டது.
30.04.2024 அன்று கொழும்பில் SLIIT மாலபே யில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 46 அணிகள் கலந்து கொண்டன. எமது இரண்டு அணிகளும் இப் போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பாக செயற்பட்டு தமது திறமையை வெளிக்காட்டியிருந்தனர்
இறுதிப்போட்டியானது 9 மணியளவில் ஆரம்பித்து முதற்கட்டமாக மாணவர்கள் பதிவு இடம்பெற்று பின் SLIIT நிறுவனத்தின் உள்ளக கட்டமைப்பு மற்றும் அதன் கற்றல் செயற்பாடுகளைப் பார்வையிட்டோம். அதன் பின்னர் அரம்பநிகழ்வுகள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து MAS நிறுவனத்தினரால் soft skills தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது இது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும், சுய ஆக்கத்திறன் மேம்பாடு, தொடர்பாடல் முறைகளை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதிய போசனை இடைவேளையின் பின் போட்டிகள் ஆரம்பமானது
இப்போட்டியில் குழு A ஐச் சேர்ந்த மாணவர்களான
1. K . Aruran
2. V . Piraveen
3. P . Yakseehan
4. J . Kalaichchanth ஆகியோர் திருமதி . ந. தர்மிகா ஆசிரியரின் வழிகாட்டலிலும்
குழு B ஐச் சேர்ந்த மாணவர்களான
1. Y . Karish
2. N . Sabeezen
3. S . Pakiskar
4. R . Sathurshan ஆகியோர் திருமதி . ம நீரிஜா ஆசிரியரின் வழிகாட்டலிலும் பங்குபற்றினர்.




இப் போட்டியில் முதல் சுற்று பொது அறிவு வினாக்களை உள்ளடக்கியதாகவும் இரண்டாம் சுற்று இரண்டு காணொளிகளை அடிப்படையாக்க் கொண்ட நினைவுப் பரிசீலனை வினாக்களை உள்ளடக்கியதாகவும்அமைந்தது.
இவர் இரு சுற்றுக்களிலும் மொத்தமாக 140 புள்ளிகைப் பெற்று குழு A 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இப் போட்டியில் இலங்கை முழுவதிலிருந்தும் வருகை தந்த அனைத்து பாடசாலை மாணவர்களுடனும் பழக்கம் கூடிய வாய்ப்பு கிடைத்ததுடன் மாணவர்களின் குழுவாக இயங்கும் ஆற்றல் பிரசினங்களைத் தீர்க்கும் ஆற்றல் நேர முகாமைத்துவம் போன்றனவற்றை விருத்தி அடையச்செய்ய கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதல்கள் வழங்கப்படதோடு, மாணவர்களுக்கு ரூபா 3000 பெறுமதியான DSI பரிசுக்கூப்பனும் கிடைக்கப்பெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனுபவமானது எம்மாணவர்களுக்கு மிகவும் சிறந்த ஒன்றாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தூண்டுதலாக அமைந்தது.
இலங்கை முழுவதும் உள்ள பல்வேறுபட்ட மாணவர்களை சந்திப்பதற்கும் அவர்களுடன் பழகுவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
அத்துடன் சிறந்த திட்டமிடல் ஒழுங்கமைப்புடன் கூடிய நிகழ்ச்சி நிரலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்குபற்றியமை சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது.
இப்போட்டியில் கலந்துகொள்ள ஆக்கமும், ஊக்கமும் தந்த பிரதி அதிபர் திரு செந்தில்வடிவேல் அவர்களுக்கும், கொழும்பிற்கு செல்வதற்ககான ஏற்பாடுகளை மிக குறுகிய காலத்தில் செய்வதற்கு உதவிய அதிபர், மற்றும் பாடசாலை சமூகத்திற்கும்
நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அறிந்தவுடன் எந்தவித தயக்கமின்றி பண உதவி வழங்கிய M சதானந்தன் அவர்கட்கும் மிகப் பெரிய நன்றிகள்
அதேவேளை பாடசாலை bus இனைத் தந்துதவிய bus society ஐச் சேர்ந்தோருக்கும்
கொழும்பில் ஓர் இரவு தங்குவதற்கு அனுமதி தந்த பம்பலபட்டி இந்துக் கல்லூரி அதிபர் அவர்கட்கும் மனமார்ந்த நன்றிகள்
மற்றும் கொழும்பு செல்லும் போது இரவு உணவினைத் தயாரித்து வழங்கிய எமது இரு மாணவர்களின் பெற்றோரிற்கும் நன்றிகள்
மற்றும் எமது மாணவர்களைத் தயார்ப்படுத்த உதவிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.





