🌱 அழகும் ஒழுங்கும் ஒளிரும் எங்கள் பாடசாலை 🌱
பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் “Clean Sri Lanka Project” கீழ் எங்கள் பாடசாலையின் தூய்மை, ஒழுங்கு மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை வலுப்படுத்தும் சிறப்புச் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டம் பாடசாலை சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களிடையே பொறுப்பு உணர்வு, நடத்தை ஒழுங்கு மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் முக்கியமான படியாக அமைந்துள்ளது.
📌 எதிர்காலத்திற்கான தூய்மையான சூழலை உருவாக்க எங்கள் உறுதி தொடர்கிறது.

















