யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாதாந்த செயற்பாட்டு அறிக்கை – வைகாசி மாதம் 2023
- Published in Achievement, News, School
தூவானம் திரைப்படம் திரையிடப்பட்டது
Dr.S.சிவன்சுதன் எழுத்துருவாக்கம் தயாரிப்பில் கலாநிதி க.ரதிதரன் இயக்கத்தில் உருவான தூவானம் முழுநீளத் திரைப்படம் 24.05.2023 தந்தை செல்வா அரங்கில் திரையிடப்பட்டது.
- Published in Achievement, News
க.பொ.த. சாதாரணதர அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு
க.பொ.த.சாதாரணதரம் 2022 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு தந்தை செல்வா அரங்கில் 24.05.2023 புதன்கிழமை 9 மணிக்கு கல்லூரி முதல்வர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது
டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு
தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 16.05.2023 இடம்பெற்றது.
மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மணிவிழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் மனதில் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர் மனங்களிலும் மதிப்புக்கும் புகழுக்கும் உரியவராக விளங்கும் செல்வி கயிலாசப்பிள்ளை கலாதேவியவர்கள் முப்பத்தைந்து வருடகால ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரிய வட்டத்தால் மணிவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது 2023.05.11 அன்று வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கிலே மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரிய வட்டத் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களாலும் ஆசிரிய வட்டத்தினராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்புச் செய்யப்பட்டார். கல்லூரியின் பிரதியதிபர்
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது 2023.04.22 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணிக்கு றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. கல்லூரியின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவராக செல்வன்.சதானந்தன் வருண்சர்மா கல்லூரி முதல்வரால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிர்வாக சபை மாணவமுதல்வர்களுக்கும் முதல்வர் சின்னம் சூட்டி கௌரவித்தார். தொடர்ந்து சிரேஷ்ட மாணவ முதல்வருக்கான சின்னங்களை பிரதி
பாடசாலை அணிகளுக்கிடையிலான 19 வயதின் கீழ் DIVISION III TIER A போட்டியின் பெறுபேற்றுப் பதிவுகள்
- Published in Achievement, News, Sports
மத்தியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான கௌரவிப்பு.
அகில இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 19 வயதின்கீழ் துடுப்பாட்ட அணியினருக்கான பிரிவு 3 Aக்கான போட்டியில் எமது கல்லூரி அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பிரிவு 2 Bக்கு தரம் உயர்த்தப்பட்டதையிட்டு துடுப்பாட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 18.04.2023 அன்று காலை 7.30 மணிக்கு கல்லூரி முன்றலில் அதிபர் திரு.சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. சாதனையாளர்களான விளையாட்டு அணி வீரர்கள் அதிபர்> பிரதியதிபர். உபஅதிபர்களால் மாலையணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின்
- Published in Achievement, News, Sports
A dream come true for Jaffna Central!
11th April’23 was a fitting finale and a fairy-tale end forJCC’s 2022/23 cricket season. Our first XI Cricketers led fm the front by allrounder Ananthan Kajan played their hearts out to earn a memorable first innings win over the much fancied Maris Stella College, Thimbirigaskatuwa and earned that elusive promotion fm Div 3 to Div
- Published in Achievement, News, School, Sports
இலவச பாடநூல் இலவச சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு
2023 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் இலவச சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு 29.03.2023 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் காலை 10.30க்கு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் கௌரவ அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக வடமாகான கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் வலயக்












